ஆல்ப் மலை உச்சியிலிருந்து விழுந்து விட்டாரே! தடுப்பூசி பொய்... நடிகை  குஷ்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! 

 
Kushboo

ஜூன் மாதம் தமிழ்நாட்டில் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக ஆங்கிலத் தொலைக்காட்சியில் பேசிய நடிகை குஷ்புவைக் கண்டித்து #LiarKushboo என்ற ஹேஷ்டேக்கை திமுகவினர் பரப்பிவருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செய்தி இணைப்பை பகிர்ந்து கடுமையாகச் சாடியும் இருந்தார் இருந்தார் குஷ்பு.  தமிழ்நாட்டில் 8.83 சதவீதம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட அந்தச் செய்தி வெளியானது மே 7ம் தேதி ஆகும்.

அதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாளன்று வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது முந்தைய அதிமுக ஆட்சியில் வீணடிக்கப்பட்ட தடுப்பூசிகளின் விவரம் ஆகும். அதைச் சுட்டிக்காட்டியுள்ள நெட்டிசன்கள், ஜூலை 15ம் தேதி வெளியாகியுள்ள செய்தி இணைப்பைப் பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளனர். இந்தச் செய்தியின் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசியை வீணடிக்காமல் 100 சதவீதத்திற்கும் அதிகமாக செலுத்தப்பட்டுள்ள விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.   

மருந்து பாட்டிலில் கூடுதலாக அடைக்கப்பட்டிருக்கும் 15 முதல் 20 சதவீதமான மருந்தை திறம்பட பயன்படுத்தி 101. 102,  104 சதவீதம் என தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகத்தில் தப்பாக திமுக ஆட்சி மீது குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல், திமுக ஆட்சிக்கு முன்னால் அதிமுக ஆட்சியில் வீணடிக்கப்பட்ட தடுப்பூசி விவரங்களைப் பகிர்ந்து மேலும் அசிங்கப்பட்டுள்ளார் பாஜக செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு.

”ஆல்ப் மலை உச்சியிலிருந்து படுபாதாளத்தில் விழுந்து விட்டாரே! பொய்யர் குஷ்பு ஒரு சரியான சங்கி” என்று ஊடகவியலாளர் வரவணை செந்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


 

From around the web