முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கவனத்திற்கு! அரசுக்கான செயலிகள் உருவாக்க தயார் நிலையில் தமிழ்நாடு மாணவர்கள்!!

 
FindABed

மே 7ம் தேதி பதவியேற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. முதல் 30 நாட்கள் பெருமபாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலேயே முழுக் கவனம் செலுத்தினாலும், பல்வேறு நலத்திட்டங்களையும் உடனடியாக அறிவித்துள்ளார் முதலமைச்சர். தமிழ்நாட்டில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியிலும் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினரும் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், அமெரிக்கத் தமிழர்களும் ஒருங்கிணைந்து புதிய செயலி ஒன்றை மிகக் குறுகிய காலத்தில் வடிவமைத்து, உருவாக்கி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். வெளியான முதல் வாரத்திலேயே 10 ஆயிரம் பயனாளர்கள் தரவிறக்கம் செய்துள்ளனர். 

தமிழ்நாடு முழுவதிலும் எந்தெந்த மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் [ஆக்ஸிஜன் | ICU] காலியாக உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ள "FindABed" செயலியை தமிழ்நாட்டு மாணவர்களை ஒருங்கிணைத்து அமெரிக்காவிலிருந்து செயல்பட்டு வரும் Hope3 Foundation என்னும் த்ன்னார்வ அமைப்பை சேர்ந்த அமெரிக்கத் தமிழர்கள் ஒன்றினைந்து உருவாக்கியுள்ளனர். 

இந்தச் செயலி உங்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளைக் படுக்கைகள், ஆக்ஸிஜன்,  தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகளுடன் காண்பிக்கும். மேலும் தொலைபேசி எண்கள்,  Google Maps உதவியுடன் செல்லும் வழி ஆகிய விவரங்களையும் காண்பிக்கும். Android: http://bit.ly/findabedapp மற்றும் IOS: http://bit.ly/findabedapp_ios என்ற இணையத்தளங்களில் ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் தளங்களுக்கான செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். https://www.youtube.com/watch?v=j6pTv_lYMDE&t=1s   என்ற யூடியுப் தளத்தில் செயலியை பயன்படுத்தும் முறையையும் விளக்கியுள்ளனர்.

மதுரை தியாகராஜா பொயிறியல் கல்லூரியில் BE (CSE) மூன்றாம் ஆண்டு பயிலும் அம்ரிஷ்,

கோயமுத்தூர் தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில்   BE (CSE) இறுதி ஆண்டு பயிலும் பால சரண்யா

கோயமுத்தூர் ராமகிருஷ்ணா கலைக் கல்லூரியில் B.Com இரண்டாம் ஆண்டு பயிலும் ஐய்யப்பன்,

கோயமுத்தூர் தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் BE (CSE) மூன்றாம் ஆண்டு பயிலும் கலையரசன்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் BE (CSE) முதலாண்டு பயிலும் கவுசல்யா,

சென்னை மீனாட்சி சுந்தரேஸ்வர் கல்லூரியில் BE (CSE) மூன்றாமாண்டு பயிலும் நாச்சியப்பன்,

சென்னை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் B.Com மூன்றாமாண்டு பயிலும் ராஜலஷ்மி,

வேலூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் M.Tech மூன்றாமாண்டு பயிலும் ப்ரீத்தி,

கோயமுத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில்   BE (CSE) முதலாண்டு பயிலும் பயிலும் ஷம்யுக்தா,

சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் BE (CSE) முதலாண்டு பயிலும் விக்ரம் புகழேந்தி.

B.Com முதலாமாண்டு பயிலும் சஜிதப்ரியா, பொறியியல் கல்லூரியில் முடித்து விட்டு தனியார் கணிணி நிறுவனத்தில் வேலையில் உள்ள ரவி மற்றும் அனுராதா, பாலசுப்ரமணியன், தினேஷ், ஹரிணி, கார்த்திக், கிஷோர்,  மணி, மனோகரன், மீனாட்சி சுந்தரம், முகிலன் ,நரேன், நீல், பழனி, பிரபு,  ராமு, ரவி , சரவணன், சிவகுமார், ஸ்ரீதர், ஸ்ருதி, தமிழரசன், வித்யாசங்கர்,  வினோத் ஆகிய தமிழ்நாட்டு மாணவர்களும், புதிய பட்டதாரிகளும் இணைந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளனர்.

இவர்களுடன் அமெரிக்காவில் 7ம் வகுப்பு பயிலும் ஸ்ருதி வைரவன், 10ம் வகுப்பு பயிலும் ஹரிணி விஜயானந்த் மற்றும் 7ம் வகுப்பு பயிலும் மீரா மனோ ஆகிய மூன்று பள்ளி மாணவிகளும் இந்த முயற்சியில் பங்கெடுத்துள்ளனர்.

மேலும் அமெரிக்காவில் சொந்தமாக கணிணி நிறுவனம் நடத்தி வரும் முன்னாள் மைக்ரோசாஃப்ட் ஊழியர் ஸ்ரீதர் விஸ்வநாத், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் முதன்மை கணிணிப் பொறியாளர் மனோகரன் குப்புசாமி,  ஆரக்கிள் நிறுவனத்தில் மூத்த பொறியாளர் மேலாளர் பிரபு கணேசன், மைக்ரோசாஃப்ட் மூத்த பொறியாளர் பழனியப்பன் வைரவன், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் முத்த திட்ட மேலாளர் தமிழரசன் ராமநாதன், அவனேட் நிறுவனத்தில் மூத்த பொறியாளர் ராமு பழனியப்பன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் முதன்மைப் பொறியாளார் நாகேந்திரபாபு அழகிரிசாமி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் முதன்மை பொறியியல் மேலாளார் வினோத் சுப்பிரமணியன், கூகுள் நிறுவனத்தில் மூத்த தகவல் பொறியாளர் கிஷோர், இண்டெல் நிறுவனத்தில் மூத்த தகவல் விஞ்ஞானி முனைவர். மீனாட்சி சுந்தரம் மணிவண்ணன் ஆகிய கணிணித்துறை வல்லுனர்கள் இந்த செயலி உருவாக்கத்திற்கு வடிவமைத்து மாணவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பல்தரப்பட்ட கணிணி வல்லுனர்களும் ஒருங்கிணைந்து வடிவமைத்த இந்த செயலி அமெரிக்க கணிணி நிறுவனங்கள் உருவாக்கும் செயலிகளுக்கு நிகரான தரம் வாய்ந்தது என்றால் மிகையல்ல. தற்போது ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பயனாளர்கள் உபயோகப்படுத்த முடியும். கூடுதல் பயனாளர்கள் உபயோகிக்கத் தொடங்கினால் தானாகவே 1 கோடி பயனாளர்களாக அதிகரித்துக் கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசின் https://tnega.tn.gov.in இணையப் பக்கத்தில் வெளியாகும் தகவல்களே இந்த செயலியில் பயன்படுத்தப்பட்டு, கூடுதலாக தற்போது பயனாளர் இருக்குமிடத்திலிருந்து அருகாமையில் உள்ள மருத்துவமனை எது, அதற்கான வழித்தடம் போன்ற தகவல்களும் கிடைக்கும் வகையில் செயலி செயல்படுகிறது.

மிகக்குறைந்த காலக்கட்டத்தில், அப்பழுக்கற்ற செயலியை தமிழ்நாட்டு மாணவர்களைக் கொண்டே வடிவமைத்துள்ள  Hope3 Foundation குழுவினர், மக்கள் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு அரசுக்குத் தேவையான அனைத்து விதமான செயலிகளையும் மாணவர்களைக் கொண்டே வடிவமைத்துத் தரத் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

இந்த செயலியை உருவாக்கிய மாணவர்களுக்கு Hope3 Foundation சார்பில் தொடர் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்த நேரத்தில், அவர்களுடைய திறமையை பறைசாற்றும் விதமாக இந்த செயலி தயாராகி உள்ளதாகவும் பெருமிதம் அடைகிறார்கள். தமிழ்நாடு அரசுக் கல்லூரியில் பயிலும் பிற மாணவர்களையும் இணைத்துக் கொண்டு தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளதாக Hope3 Foundation ஒருங்கிணைபாளர் பழனியப்பன் வைரவன் தெரிவித்தார். Hope3 Foundation அமைப்பின் செயல்பாடுகள் பற்றிய கூடுதல் தகவல்களை hope3.org என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

வெளிப்படையான ஆட்சி நிர்வாகத்திற்கு உறுதி அளித்து செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மாணவர்களின் திறமைகளையும் அமெரிக்கத் தமிழர்களின் கணிணித் துறை அனுபவங்களையும் அரசு இணையத்தளங்களுக்கான செயலிகளை உருவாக்க வாய்ப்பு வழங்குவார் என்றுஎதிர்ப்பார்க்கலாம்

- இர,தினகர்

From around the web