இந்த பாம்பு தான் என்னை கடிச்சது.. டப்பாவில் அடைத்து பாம்பை மருத்துவமனைக்கு எடுத்து வந்த நபரால் பரபரப்பு!

 
Man-brings-bitten-snake-to-hospital

கடித்த பாம்பை கையோடு பிடித்துக்கொண்டு சிகிச்சைக்கு வந்த நபரால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், மல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தனது விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை 4 அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா, உடனே தன்னைக் கடித்த பாம்பைப் பிடித்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்துள்ளார். பின்னர் அந்த டப்பாவை கையோடு எடுத்துக்கொண்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

இதைப் பார்த்த மருத்துவர்களும், செவிலியர்களும் அச்சமடைந்தனர். மேலும் இந்தப் பாம்புதான் தன்னை கடித்தது என ராஜா மருத்துவர்களிடம் கூறியுள்ளார். பிறகு அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.

விஷத்திற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும் என்பதற்காகவே தன்னைக் கடித்த பாம்பையும் கையோடு பிடித்து அவர் கொண்டுவந்தது தெரியவந்தது. கடித்த பாம்பை கையோடு பிடித்துக்கொண்டு சிகிச்சைக்கு வந்ததால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

From around the web