மூன்றாம் தலைமுறை நட்பு! இதெல்லாம் திமுகவில் மட்டுமே சாத்தியம்?

 
மூன்றாம் தலைமுறை நட்பு! இதெல்லாம் திமுகவில் மட்டுமே சாத்தியம்?

பெரியாரின் கொள்கை அரசியலில் இருந்து, வாக்கரசியலின் முக்கியத்துவம் உணர்ந்து திராவிடக் கழகத்தில் இருந்து, அண்ணா பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பமானது தான் நட்பின் விதை எனலாம்.

தலைமுறைகள் தாண்டி பாராட்டும் நட்பு, உறவு திமுக வில் பல உறுப்பினர்களிடம் இருந்துள்ளது. அன்பில் தர்மலிங்கம் குடும்பம், பழக்கடை ஜெயராமன் குடும்பம், பிடி ராஜன் குடும்பம் என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் குட்டப்பாளையம் மிசா சாமிநாதன் ஐயாவின் குடும்பமும் அடக்கம்.

2017 ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, பல மக்களால் இளைஞர்களால் அன்பிற்கு பாத்திரமானவர். கலாச்சாரம் என்று பேசிக்கொண்டிருந்த ஜல்லிக்கட்டை அறிவியல் கோணத்திற்கு உட்படுத்தி அதன் விளவுகளை அனைவருக்கும் எடுத்துக்காட்டியவர் அண்ணன் கார்த்திகேய சிவசேனாபதி. அப்போராட்டத்திற்குப் பிறகு பல மக்களிடம் பரிட்சியமாகி, தமிழ், திராவிடம், மொழி, கலாச்சாரம், காங்கேயம் நாட்டின மாடுகள், கொரங்காடு போன்ற பல பொருண்மைகளில் உலக நாடுகளுக்கு சென்று உரையாற்றியவர்.

இப்படிப்பட்ட ஆளுமையின் வரலாறு அறியா பலர், இவர் பொதுத் தளத்தில் இருந்து திராவிடம், பெரியாரியம் என்று பேசும்போது இவரை எள்ளி நகைக்கின்றனர். அதனை சற்று உற்று நோக்கினால், 40 பேர் திமுக கையொப்பம் இட்டு கட்சியை ஆரம்பித்த அன்று, 40களில் ஒருவராக இருந்தவர், குட்டப்பாளையம் மிசா சாமிநாதன். பொது வாழ்க்கையில் சட்டமன்ற உறுப்பினராக மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதியாக வலம் வந்தவர் அவர். அவரது மகனும் அதே பொது வாழ்வில் இருந்தவர்.

இவ்வளவு வரலாறுமிக்க குடும்பத்தில் பிறந்தவர் தான் கார்த்திகேய சிவசேனாபதி. இவரும் பொதுத் தளங்களில் திராவிடம், திராவிட முன்னேற்றக் கழகம், கலைஞர் என பேசுவது ஆச்சரியமில்லை. இதை விட விஜய் தொலைக்காட்சியில் நடந்த நீயா நானாவின் கலைஞர் சிறப்பு பேச்சரங்கத்தில் பேசும் போது, அருமையான நினைவை பகிர்ந்திருப்பார்.

2016 சட்டமன்ற தேர்தலில் காங்கேயம்  சட்டமன்றத் தொகுதிக்கான  நேர்காணலுக்கு சென்றபோது, ஐயா துரைமுருகன் அண்ணன் கார்த்திகேய சிவசேனாபதி பற்றி கலைஞரிடம் சொன்னபோது மகன் வயித்து பையனா? மக வயித்து பையனா? என்று கேட்டதெல்லாம் ஆச்சரியத்தின் உச்சம்.

கடந்த சில தினங்களுக்கு முன் உதயநிதி அவர்களை சந்தித்த புகைபடத்தை பதிந்த போது ஏசியவர்களுக்கு மேல் சொன்ன வரலாறும், தலைமுறை கடந்த நட்பும் விளங்கும் என நினைக்கிறேன்.

- மு.வ.தயாநிதி

A1TamilNews