அதிமுகவில் எந்தவித சலசலப்பும் இல்லை... ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக அதிமுக செயல்படும் - ஜெயக்குமார்

 
Jayakumar

ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக அதிமுக செயல்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சியான அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை வரும் 14-ம் தேதி நடத்த அனுமதி கேட்டு சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் இன்று மனு அளித்துள்ளனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், “அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 14-ம் தேதி பகல் 12 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். கூட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சசிகலாவிற்கும் அதிமுகவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறியிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

மேலும் அதிமுகவில் எந்தவித சலசலப்பும் இல்லை என்றும் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக அதிமுக தொடர்ந்து செயல்படும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

From around the web