கொரோனா பரவிய அதேவேகத்தில் குறைந்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
MaSubramanian

கொரோனா நோயாளிகளே இல்லை என்ற நிலை விரைவில் ஏற்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை காரணமாக தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஜூன் மாதத்திற்கான 42 லட்சம் தடுப்பூசிகளில் நேற்று சுமார் 5 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. தமிழகத்தில் தற்போது 6.5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இன்னும் 4 நாட்களுக்கு போதுமான அளவு தடுப்பூசிகள் உள்ளன

தினசரி கொரோனா பாதிப்பை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் இல்லை என்ற நிலை விரைவில் உருவாகும் என்றார்.

From around the web