தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 14 ஆயிரத்து 46 ஆக உயர்வு

 
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 14 ஆயிரத்து 46 ஆக உயர்வு

இன்று ஒரே நாளில் 18,692 பேருக்கு கொரோனா பாதிப்பு என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 18,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இதனால் மொத்த பாதிப்பு 11,66,756 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மேலும் 5,473 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 13,219 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 3,34,296 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவிலிருந்து 16,007 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 10,37,582 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,15,128 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 1,38,235 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 2,22,78,880 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 113 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 14,046 ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

From around the web