விடியா ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் நாமம் தான்.. அதிமுக போஸ்டரால் பரபரப்பு

 
ADMK-poster-in-Mannaparai

மணப்பாறையில் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் நியாயவிலைக்கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் பிரதான இடங்களில் அதிமுக சார்பில் சில வாசகம் அடங்கிய போஸ்டர் அச்சிட்டு ஒட்டப்பட்டள்ளது.

அதில், முதலாம் ஆண்டு நினையூட்டல் என்ற தலைப்பில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் தொகுப்புடன் 2,500 ரூபாய் வழங்கப்பட்டதாகவும், இந்த ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் நாமம் தான் என்றும் அச்சிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

From around the web