தமிழகத்தில் இருந்து ஆந்திர, தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்பும் முடிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: முதல்வர் பழனிசாமி

 
தமிழகத்தில் இருந்து ஆந்திர, தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்பும் முடிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: முதல்வர் பழனிசாமி

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அளவு போதுமானதாக இல்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக ஆலைகளிலிருந்து வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.  

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

“தமிழகத்தில் 400 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் கொண்டு சென்றால், கடும் பற்றாக்குறை ஏற்படும். தமிழகத்திற்கு 220 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் போதுமானது என மத்திய அரசால் தவறான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைவிட குறைவாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு இங்கிருந்து ஆக்ஸிஜனை திருப்பிவிட்டால், சென்னை போன்ற நகரங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. நாள்தோறும் தமிழகத்திற்கு 310 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில், விரைவில் 450 மெட்ரிக் டன் தேவைப்படும் நிலையில் உள்ளது.

ஆகையால் ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து பிற மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ள ஆக்ஸிஜனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web