சாலையோர கடையில் தேநீர்..! மகிழ்ச்சியுடன் செல்பி..! முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
CM-Stalin-selfie-with-nurses

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த போது, சாலையோர கடையில் அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைக்கப்பட்ட நிவாரண முகாமுக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் மாம்பாக்கம் சாலையோர கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அப்போது கடையில் இருந்த ஊழியர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

CM-stalin-selfie-with-public

அதனைதொடர்ந்து 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தனியார் மருத்துவமனை செலியியர்கள் இருவரை அழைத்து எங்கு பணி செய்கிறீர்கள் என்ற விவரத்தையும் முதல்வர் கேட்டறிந்தார். அப்போது அந்த 2 செவிலியர்கள் முதல்வருடன் செல்பி எடுத்து கொண்டனர்.

From around the web