நீட் தேர்வுக்கு தமிழ்நாடு மாணவர்கள் தயாராக வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 
MaSubramanian

நீட் தேர்வுக்கு தமிழ்நாடு மாணவர்கள் தயாராக வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நீட் வரும் செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “நீட் வேண்டாம் என்பதுதான் திமுக அரசின் கொள்கை. நீட் தேர்வு ஆய்வுக்குழு தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்யும் பணிகள் தொடர்ந்து வருகிறது. நீர் தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது தவறில்லை. நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்” என்றார்.

From around the web