தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு - தமிழக அரசு அறிவிப்பு

 
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தபடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்றும், இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது பேருந்து போக்குவரத்து அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், கடற்கரை உள்ளிட்ட அனைத்துவகை சுற்றுலா தலங்களுக்கும் தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், உணவகங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கபடுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மே மாதம் நடைபெற இருந்த 12-ம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

From around the web