24 மணி நேரத்திற்குள் தீர்வு கண்ட ஸ்டாலின்! மத்த கட்சிக்காரங்களும் இதைச் செய்வாங்களா?

 
Ma Subramanian

திமுக கூட்டணி வெற்றி பெற்று வெள்ளிக்கிழமை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார் மு.க.ஸ்டாலின். இந்த நேரத்தில் சென்னையில் அம்மா உணவகத்தின் முன்பு இருந்த போர்டுகளை அடித்து நொறுக்கியுள்ளனர் இரு திமுகவினர். வாட்ஸ் அப்பில் தீயாகப் பரவிய வீடியோ ஸ்டாலின் கவனத்திற்கும் போனது.

உடனடியாக அந்த இருவரையும் கட்சியிலிருந்து  நீக்கியதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். செய்தியாளர்களிடம் இந்தத் தகவலை பகிர்ந்து கொண்டார் திமுக எம்.எல்.ஏவும் மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியன். பார்த்தீங்களா திமுக ரவுடிகளை என்று சமூகத்தளங்களில் அனல் பறந்த விவாதங்களுக்கு, ஸ்டாலினின் துணிச்சலான முடிவு முற்றுப் புள்ளி வைத்தது.

அதே வேளையில் மற்ற கட்சிக்காரர்களைப் பார்த்து கேள்விகள் தற்போது திரும்பியுள்ளது. கோவையில் பிரச்சாரத்தின் போது கடைகள் மீது கல்லெறிந்த பாஜகவினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. சாலையில் விதிகளை மீறி ஃபிளக்ஸ் வைத்த அதிமுக நிர்வாகியால் உயிரிழந்தாரே இளம்பெண். அந்த அதிமுககாரர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. தர்மபுரியில் கல்லூரி மாணவிகளை பஸ்ஸில் உயிருடன் எரித்தார்களே, அவர்களுக்கு கட்சியில் ஏன் பதவி வழங்கினார்கள் என அடுத்தடுத்த கேள்விகளை முன் வைக்கிறார்கள் நெட்டிசன்கள்.

நியாயம் தானே! திமுகவுக்கு ஒரு நியாயம், அதிமுக, பாஜகவுக்கு வேறு நியாயமா? அந்த கட்சிகளும் நடவடிக்கை எடுப்பார்களா?

From around the web