சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு தள்ளுபடி... செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவு

 
Sivasankar-Baba

பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது .

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் இவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் 2 வது வழக்கில் செங்கல்பட்டில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மனுவை விசாரித்த நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், பாலியல் வழக்கில் ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா தரப்பில் அவரது உதவியாளர் சுஷ்மிதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இரண்டு போக்சோ வழக்குகளிலும் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

From around the web