பெட்ரோல், டீசல் விலை உயர்வு... வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

 
Vijayakanth

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.19-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.91.42-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளதாகவும், கொரோனாவால் ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கச்சா எண்ணெய் விலை உயர்வதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வதாக ஒன்றிய அரசு கூறுவதை தற்போதைய சூழலில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள விஜயகாந்த், எரிபொருள் விலையை குறைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

From around the web