தமிழ்நாட்டில் வரும் 31-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..!

 
Lockdown

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துவிட்டது. ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்தாலும், மற்றொரு பக்கம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தொற்று பாதிப்பு அதிகரிப்பால் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, ஏனைய  நாட்களில் இரவு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுக்ள் விதிக்கப்பட்டன.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதலாக சில கட்டுப்பாடுகளுடன் தமிழ்நாடு அரசு ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

  • பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்வோர் பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75 சதவீதம் பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி
  • ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு
  • பொது முடக்க காலத்தில் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ம் தேதி வரை அமலில் இருக்கும்

From around the web