மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

 
மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

”நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும்  இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பேரும் புகழும் பெற வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்,” என்று வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

ஒவ்வொரு ஆண்டும் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வந்த ரஜினிகாந்த், கடந்த 2020ம் ஆண்டு மார்ச்1 ம் தேதி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web