தமிழகத்தில் மழை கொட்டித் தீர்க்க இருக்கும் மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக சிலநாட்களாக பெய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரை நீலகிரி மாவட்டமே வெள்ளத்தில் மிதக்கிறது. அவலாஞ்சியில் ஒரே நாளில் 58 செமீ மழை கொட்டி தீர்த்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மழை பிரதேசங்களான கோவை,தேனி ஆகிய மாவட்டங்களில் கனமானது முதல் மிக கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களான திருப்பூர், திண்டுக்கல், நெல்லை,தென்காசி, விருதுநகர் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல்
 

தமிழகத்தில் மழை கொட்டித் தீர்க்க இருக்கும் மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!ந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக சிலநாட்களாக பெய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரை நீலகிரி மாவட்டமே வெள்ளத்தில் மிதக்கிறது.

அவலாஞ்சியில் ஒரே நாளில் 58 செமீ மழை கொட்டி தீர்த்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மழை பிரதேசங்களான கோவை,தேனி ஆகிய மாவட்டங்களில் கனமானது முதல் மிக கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள் மாவட்டங்களான திருப்பூர், திண்டுக்கல், நெல்லை,தென்காசி, விருதுநகர் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மலை பிரதேச மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web