நெல்லையில் கல்லூரி ஆசிரியர்களுடன் ராகுல் காந்தி! 

 
நெல்லையில் கல்லூரி ஆசிரியர்களுடன் ராகுல் காந்தி!

தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, திருநெல்வேலி பாளையங்கோட்டைசெயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் செய்து வருகிறார். திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இன்றைய கல்விச் சூழல் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மாணவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்திய அரசு இந்துயிசத்தை பின்பற்றுவதாக கூறுகிறது. ஆனால் இந்துயிசத்தில் சொல்லாத அனைத்தையும் செய்கிறார்கள். மற்றவர்களை அன்புடன், மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தான் அனைத்து மதங்களும் சொல்கிறது. மக்களிடமிருந்து பணத்தை பிடுங்கிக் கொள்வதைத் தான் இந்த அரசு செய்து வருகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு தேவையா என்று கேட்ட ராகுலிடம், இல்லை இங்கே அனைவரும் ஆங்கிலப் புலமை கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டதும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ராகுல்.

ஆங்கிலேயர் ஆட்சிகாலம் முதலாகவே கல்வியில் சிறப்புடன் விளங்கும் திருநெல்வேலி - பாளையங்கோட்டை பகுதிக்கு “தென்னகத்தின் ஆக்ஸ்ஃபோர்டு” என்ற பெருமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெருமை குறித்து ராகுலுக்கு யாராவது எடுத்துச் சொல்லியிருந்தால் அவருக்கு அந்தப் பகுதி பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்திருக்கும்.

A1TamilNews