பொதுமக்கள் மெரினாவுக்கு செல்ல தடை!

 
Marina-beach

சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியான நிலையில், இன்று மக்கள் கடற்கரை வரத் தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து கல்லூரிகளிலும் தேர்வுகள் நேரடியாக தான் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆன்லைனில் தேர்வுகள் நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டதில் ஈடுபடப் போவதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து கடற்கரை முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மெரினாவில் உள்ள சர்வீஸ் சாலை மூடப்பட்டது.

மேலும், இன்று பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வர அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது.

From around the web