தமிழகத்தில்  தனியார் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது!தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் நாளை செப்டம்பர் 1ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அரசுப் பேருந்துகள் நாளை முதல் மாவட்டத்திற்குள் இயக்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்துகளை
 

தமிழகத்தில்  தனியார் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது!தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு!தமிழகத்தில் பரவி வரும்  கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் நாளை செப்டம்பர் 1ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அரசுப் பேருந்துகள் நாளை முதல் மாவட்டத்திற்குள் இயக்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி  ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்துகளை இயக்கினால் தேவையான  லாபம் கிடைப்பதில் சிக்கல்கள் உருவாகலாம். பேருந்திற்குள் சமூக இடைவெளியுடன் பயணிகள் அமர வகை செய்ய வேண்டும் என்ற அரசின் உத்தரவை எதிர்த்து பேருந்தில் உள்ள இருக்கைகள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுவரை தனியார் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

A1TamilNews.com