பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி; திருச்சி மருத்துவமனையில் அனுமதி!!

 
DMK-MLA-Prabhakaran

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினசரி பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினருக்கும் உள்ளிட்டோருக்கும் தொற்று ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் எம்.எல்.ஏ. ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web