அழிவுசக்தி சீமானை மக்கள் புறக்கணித்துள்ளனர்! ஜோதிமணி எம்.பி. பெருமிதம்!!

 
Jothimanki

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியைப் பாராட்டியும், அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியின் படு தோல்வியை விமர்சித்தும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

"ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட சிறப்பானது. குறுகிய காலத்தில் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு குறுகியகாலத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு மக்களின் நம்பிக்கை முன்னைவிட அதிகமாக வென்றெடுத்திருக்கிறது. இந்த வெற்றிப்பயணம் தொடரட்டும்.

அதேநேரம் அதிமுக - பாஜக கூட்டணியின் படுதோல்வி அதிமுகவின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. பாஜகவை தூக்கி சுமப்பதற்கு அதிமுக கொடுத்துள்ள மகத்தான விலை இது. அதேபோல சீமான் போன்ற அழிவுசக்தியை அடையாளம் கண்டு மக்கள் புறக்கணித்திருப்பது முக்கியமானது.

தமிழகம் தொடர்ந்து அமைதி, வளர்ச்சி, ஒற்றுமையின் பாதையில் பயணிக்க விரும்புவதையே இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளும், வெற்றிபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு நல்வாழ்த்துகளும்." என்று ஜோதிமணி எம்.பி. கூறியுள்ளார்.

From around the web