தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு... தமிழகத்தில் எந்த கட்சி எத்தனை இடங்களில் முன்னிலை

 
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு... தமிழகத்தில் எந்த கட்சி எத்தனை இடங்களில் முன்னிலை

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த சுற்றுகளில் திமுகதான் முன்னிலை வகித்து வருகிறது. அதே சமயம் அதிமுக எதிர்பார்த்ததை விட பல தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி எந்த கட்சி எத்தனை இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்பதை இப்போது பார்ப்போம். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 230 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி பார்த்தால் திமுக அதிகபட்சமாக 117 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திமுகவிற்கு அடுத்தபடியாக அதிமுக 79 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

காங்கிரஸ் 13 இடங்களிலும், பாமக 10 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், விசிக 3 இடங்களிலும், சிபிஎம் மற்றும் சிபிஐ தலா 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மநீம ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளன.

கூட்டணியாக பார்த்தால் திமுக கூட்டணி 137 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 93 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மநீம கூட்டணி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.

From around the web