மனித உயிரை விட வேறு எதுவும் முக்கியமில்லை.. மனிதாபிமானம் இந்த நாட்டின் சாராம்சம் - குஷ்பு ட்வீட்

 
Kushboo

உத்தர பிரதேசத்தில் ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

உத்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினார். இந்த வன்முறை சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் பலர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்தர பிரதேசம் வன்முறை சம்பவம் குறித்து நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றி 8 பேரை கொன்றது கடுமையான குற்றம். எந்த விதத்திலும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை வேண்டும். மனித உயிரை விட வேறு எதுவும் முக்கியமில்லை. மனிதாபிமானம் இந்த நாட்டின் சாராம்சம்” என்று பதிவிட்டுள்ளார்.

From around the web