நீட் தேர்வு விவாதம்: சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு

 
ADMK

நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவிருந்தது.

இந்நிலையில், இன்று காலை அவைக் கூடியதுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அளித்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது என்று கூறினார்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி கூறிய ஒரு கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுப்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனார்.

From around the web