நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு; தமிழ்நாட்டில் இன்று 1 லட்சத்து 12 ஆயிரத்து 899 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்

 
Neet

தமிழ்நாட்டில் இன்று நடைபெற உள்ள நீட் தேர்வை 1 லட்சத்து 12 ஆயிரத்து 889 பேர் எழுத உள்ளனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட  இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதையடுத்து நடப்பு ஆண்டு நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில் சென்னையில் 33 மையங்களில் 17,966 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் இன்று 1 லட்சத்து 12 ஆயிரத்து 889 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர்.

இதில் சென்னை மண்டலத்தில் மட்டும் 33 மையங்களில் 17,996 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். தேர்வானது மதியம் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறும். தேர்வு நடைபெறும் மையங்கள் மூன்று நாட்கள் தேசிய தேர்வு ஆணைய முகமையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

From around the web