‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 6 ‘விவசாயக் கடன் தள்ளுபடி’

விவசாயக் கடன் தள்ளுபடி இந்தியாவில்நெடுங்காலமாக இயங்கி வரும் ஒரு பன்னாட்டு நிறுவனம், ஆண்டு தோறும் “Management Trainee” என்றுபிரபல பல்கலைகழகங்களிலிருந்து நேரடியாக தேர்வு செய்கிறார்கள். ஒன்றரை ஆண்டு காலம் கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆறு வாரமும் நிறுவனத்தின் வெவ்வேறு கிளைகள், துறைகளுக்கு சென்று ஒரு குறிப்பிட்ட ப்ராஜெக்ட் செய்து முடிக்க வேண்டும். ஒரு ஆறு வார காலம் மட்டும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள, மின்சாரம் உட்பட எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஒரு கிராமத்தில், ஒரு
 

விவசாயக் கடன் தள்ளுபடி

‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 6 ‘விவசாயக் கடன் தள்ளுபடி’
ந்தியாவில்நெடுங்காலமாக இயங்கி வரும் ஒரு பன்னாட்டு நிறுவனம், ஆண்டு தோறும் “Management Trainee” என்றுபிரபல பல்கலைகழகங்களிலிருந்து நேரடியாக தேர்வு செய்கிறார்கள். ஒன்றரை ஆண்டு காலம் கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆறு வாரமும் நிறுவனத்தின் வெவ்வேறு கிளைகள், துறைகளுக்கு சென்று ஒரு குறிப்பிட்ட ப்ராஜெக்ட் செய்து முடிக்க வேண்டும். ஒரு ஆறு வார காலம் மட்டும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள, மின்சாரம் உட்பட எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஒரு கிராமத்தில், ஒரு விவசாயி குடும்பத்துடன் வாழ்ந்து வர வேண்டும்.

ஆறுவார காலத்திற்குள் அந்த விவசாய குடும்பத்தின் வாழ்க்கை, பொருளாதாரம் ஆகிவற்றை தெரிந்து கொண்டு அந்த குடும்ப மேம்பாட்டுக்கு ஏதாவது திட்டம் தீட்டிக் கொடுக்க வேண்டும். அது தொடர்பான அறிக்கையை நிறுவனத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

தொன்று தொட்டு நடைமுறைப்படுத்தி வரும் இந்த வழக்கம் எதற்காக?. நிறுவனத்தில் உயர் அதிகாரிகளாக பணிபுரிபவர்களுக்கு, நாட்டின் ஏழ்மையான குடும்பம் எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும். தலைமைப் பண்பு என்பது ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் சார்ந்தது இல்லாமல், அடித்தட்டு மக்களும் சார்ந்ததாக இருக்க வேண்டும். நிறுவன முடிவுகள் எடுக்கும் போது அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது தான்.

ஏன் என்றால் இந்திய நாட்டின் பொருளாதாரம், வலிமை அனைத்துக்குமே கிராமப்புற விவசாயிகள் தான் பின்புலம் என்பதை கார்ப்பரேட் நிறுவனங்களும் அறிந்து வைத்துள்ளார்கள். விவசாயிகள் மீண்டும் விதைத்து, பயிர்களைக் காத்து, அறுவடை செய்து சந்தைக்கு அனுப்பினால் தான் இந்தியப் பொருளாதாரம் நிலைத்து நிற்கும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மூலப்பொருளை விளைவிப்பது விவசாயிகள் தான். விவசாயிகள் வீழ்ச்சியடைந்தால் இந்திய நாடும் வீழ்ச்சியடையும் என்பது தான் உண்மையான நிலை.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுக்கும் அரசாங்கம், விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதற்குக் கூட யோசிக்கிறார்கள். ஒரு நிறுவனம் வீழ்ச்சி அடைந்தால் அதை காப்பாற்ற, கடன்களை தள்ளுபடி செய்து, அதை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திருப்புகிறார்கள். இது வரையிலும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தனியார் கட்டமைப்பு நிறுவனமான IL&FS இப்போது அரசிடம் பணம் கேட்டு நிற்கிறார்கள். ஒபாமா அமெரிக்க நிறுவனங்களுக்கு கொடுத்தது போல் இந்தியாவும் இந்த கம்பெனிக்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது.

ஆனால், விவசாயிகள் தங்கள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நேரில் அழைத்துக் கேட்பதற்கு கூட பிரதமருக்கோ, விவசாயத் துறை அமைச்சருக்கோ மனம் இல்லை. நம் தமிழக விவசாயிகளும் பிற மாநில விவசாயிகளும் எவ்வளவோ போராடிப் பார்த்தும் பிரச்சனை பற்றி கேட்பதற்குக்கூட மத்திய அரசில் யாருக்கும் மனசு கிடையாது என்பதை நாடே அறிந்து கொண்டது. அதே சமயத்தில், ஒரு சில மாநில அரசுகள் விவசாயக் கடன்களை இந்த ஆண்டு தள்ளுபடி செய்தார்கள், அந்த மாநில முதல்வர்களுக்கும் அமைச்சர்களுக்கும் நாம் அனைவருமே நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த வகையில் இந்தியாவுக்கே முன்னோடி கலைஞர் அவர்கள் தான். முதலில் விவசாயக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்தார். 2006ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற போது விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்தார். தொடர்ந்து பருவமழை பொய்ப்பு, விளைச்சல் குறைவு, விலை வீழ்ச்சி என்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்து பயிர் நடவு செய்யும் வசதி இல்லாமல் போன போது கடன்களும் பெரும் சுமையாக அழுத்தியது.

எனக்கு நேரடியாகத் தெரிந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்குத் தள்ளப்பட்டதை அறிவேன். என்னதான் ஆறுதல் சொன்னாலும், அவர்களுக்கு உதவ முடியாத நிலை தான். அந்த சமயத்தில் கலைஞர் அவர்களின் விவசாயக் கடன் தள்ளுபடி உத்தரவு, அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. நாம் மீண்டு விட முடியும் நம்பிக்கையோடு இருங்கள் என்று அவர்களிடம் எடுத்துச் சொல்ல முடிந்தது. மீண்டும் விவசாயம் செய்து இன்று அதைத் தொடர்ந்து செய்யும் நிலைக்கு திரும்பியுள்ளார்கள்.

எனக்குத் தெரிந்தே 200 குடும்பங்கள் தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் என்றால், தமிழகம் முழுவதும் எத்தனை லட்சக்கணக்கான குடும்பங்கள் அப்படி இருந்து இருப்பார்கள். அத்தனை பேருக்கும் நம்பிக்கை கொடுத்து லட்சக்கணக்கான தமிழக விவசாயக் குடும்பங்களை தற்கொலை என்னும் இனப் பேரழிவிலிருந்து காத்தவர் கலைஞர் அவர்கள் தான்.

சம்மந்தப்பட்ட விவசாயக் குடும்பங்களும் சந்ததியினரும் தங்கள் ஆயுளுக்கும் இதை மறக்க மாட்டார்கள். விவசாயிகளை தக்க நேரத்தில் காத்தவர் கலைஞர், இன்னும் பல விவசாய நலத் திட்டங்களையும் நிறைவேற்றினார். அதை அடுத்ததாகத் தொடர்கிறேன்

– கார்த்திகேய சிவசேனாபதி

www.karthikeyasivasenapathy.in

முந்தைய வாரம்…

‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 5   ‘தென்னை நல வாரியம் ’

From around the web