‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 5   ‘தென்னை நல வாரியம் ’

தென்னை நல வாரியமும் தேங்காய் எண்ணெய்யும் தமிழ்நாட்டில் மற்ற முதலமைச்சர்களைக் காட்டிலும், விவசாயிகளுக்கு அதிகமான திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர். அடித்தட்டு விவசாயிகளின் எண்ணங்களையும் சிரமங்களையும் புரிந்து கொண்டு செயல்பட்டவர். ஒரு சாமானிய விவசாயி கூட அவரிடம் கருத்துக்களைக் கொண்டு சேர்க்க முடியும் வகையில் செயல்பட்டார். ஒரு விவசாயியாக எனக்கு நேரடியாகவே கலைஞர் அவர்களிடம் ஒரு அனுபவம் உண்டு. சித்தப்பா ராஜ்குமார் மன்றாடியார் ஒரு சிறந்த ஆளுமை. திமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த
 

 தென்னை நல வாரியமும் தேங்காய் எண்ணெய்யும்

‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 5   ‘தென்னை நல வாரியம் ’

மிழ்நாட்டில் மற்ற முதலமைச்சர்களைக் காட்டிலும், விவசாயிகளுக்கு அதிகமான திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர். அடித்தட்டு விவசாயிகளின் எண்ணங்களையும் சிரமங்களையும் புரிந்து கொண்டு செயல்பட்டவர். ஒரு சாமானிய விவசாயி கூட அவரிடம் கருத்துக்களைக் கொண்டு சேர்க்க முடியும் வகையில் செயல்பட்டார். ஒரு விவசாயியாக எனக்கு நேரடியாகவே கலைஞர் அவர்களிடம் ஒரு அனுபவம் உண்டு.

சித்தப்பா ராஜ்குமார் மன்றாடியார் ஒரு சிறந்த ஆளுமை. திமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த போது தென்னை விவசாயிகளுக்காக ஒரு வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து கலைஞரிடம் சமர்பித்தார். அந்த கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து கொண்ட கலைஞர் அவர்கள், உடனடியாக தென்னை நல வாரியத்தை அமைத்து, ராஜ்குமார் மன்றாடியார் அவர்களையே வாரியத் தலைவராகவும் நியமித்தார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள தென்னை விவசாயிகள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு, நோய் பாதுகாப்பு, சந்தைப் படுத்துதல் உள்ளிட்ட அனைத்து வகையான தேவைகளுக்கும் பயிற்சி, வழிகாட்டுதல் என வாரியம் செயல்பட்டது. அந்த நேரத்தில், தென்னை வாரியம் அமைக்க காரணமாக இருந்து, தலைவராக சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த சித்தப்பா ராஜ்குமார் மன்றாடியாரிடம் நான் ஒரு புத்தகத்தைக் கொண்டு சென்று அன்பளிப்பாகக் கொடுத்தேன். அமெரிக்க ஆராய்ச்சி ஆசிரியர் எழுதிய தேங்காய் எண்ணெயின் பயன்பாடுகள் பற்றிய புத்தகம் அது. 

சுத்தமான தேங்காய் எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்புக்கும் எவ்வாறு பயன்படுகிறது என்பதை விலாவாரியாக எழுதியிருந்தது. மேலும் பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் கார்ப்பரேட் கம்பெனிகள் தேங்காய் எண்ணெய் பற்றி தவறாக பரப்பியிருந்த தகவல்களையும், ஆதாரப்பூர்வமாக மறுத்து எழுதியிருந்தார்.

இந்தப் புத்தகத்தை ராஜ்குமார் மன்றாடியார் அவர்கள் இரண்டே நாளில் படித்து முடித்து விட்டு கலைஞர் அவர்களிடம் கொண்டு சென்று கொடுத்தார். கலைஞரும் புத்தகங்களை உடனே படித்து முடிப்பவர். படித்து முடித்து விட்டு ராஜ்குமார் மன்றாடியார், விவசாயத் துறை அமைச்சர், விவசாயத்துறை மற்றும் எண்ணெய் வித்து துறைச் செயலாளர் ஆகியோரை அழைத்து, புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள  தேங்காய் எண்ணெய் பற்றிய தகவகல்களின் உண்மைத் தன்மையை கண்டறியுமாறு கூறினார்.

சில நாட்களிலேயே, புத்தகத்தில் கூறியுள்ள தகவல்களை ஆராய்ந்த துறைச் செயலாளர் சண்முகம் ,மேலும் விரிவான தகவல்களுடன், புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் உண்மையானது என்று  கலைஞரிடம்கூறியுள்ளார். மீண்டும் மேலே குறிப்பிட்டுள்ள  நால்வரையும் அழைத்த கலைஞர் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் வினியோகிக்கச் சொல்லி உத்தரவிட்டார்.  சல்ஃபர் சேர்க்காத சுத்தமான தேங்காய் எண்ணெய் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வினியோகித்தார்கள். 

மேலும், சத்துணவுக் கூடங்களில் சமைப்பதற்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும் உத்தரவு பிறப்பித்தார்கள். குழந்தைகளுக்கு கூடுதல் சத்தான ஆரோக்கியமான உணவுக்கும் வழி வகுத்தார். கலைஞர் அவர்களின் இந்த முடிவால், தென்னை விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைத்தது.  நிதித் துறைச் செயலாளரிடம் தென்னை வாரியத்திற்கு தேவையான அனைத்து நிதியுதவிகளையும் செய்து தரவெண்டும் என்றும் உத்தரவிட்டார். கொங்கு பகுதி உள்ளிட்ட தமிழக தென்னை விவசாயிகளின் பொற்காலம் அது என்றே சொல்லலாம்.

ஒரு சாமானிய விவசாயியின் கருத்தையும் உள்வாங்கிக் கொண்டு, அதில் உள்ள உண்மைகளைக் கண்டறிந்து உடனே சரியான முடிவெடுக்கும் தலைமைப் பண்பு கொண்டவர் என்பதற்கும் இந்த சம்பவங்கள் எடுத்துக் காட்டாகும். அப்படி அவரை யாரும் எளிதில் அணுக முடியும் என்பதற்கு இன்னும் சில சம்பவங்களில் நானே சம்மந்தப்பட்டிருக்கிறேன். அவற்றையும் பின்னர் விவரிக்கிறேன்.

அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அக்கறை கலைஞர் அவர்களிடம் எப்போதும் உண்டு. அது குறித்து தொடர்ந்து பேசலாம்.

– கார்த்திகேய சிவசேனாபதி

(தொடரும்…)

முந்தைய வாரம்

‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’

‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 3 ‘கொங்கு வேளாளர்’

‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 2 ‘கொங்கு மண்டலம்’

‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 1 ‘மிசா சாமிநாதன்’

‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதியின் புதிய தொடர் – ஒர் அறிமுகம்

 

From around the web