என் உயிரினும் மேலான அனபு உடன்பிறப்புகளே! காந்த குரலால் கட்டிவைத்த கருணாநிதி... கலைஞர் ஒரு காவியம்!!

 
Karunanidhi

இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ‘முத்துவேல் கருணாநிதி’.

திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரு பகுதியாக இருந்து, உறுப்பினர்களை நிறுவி 1969-ல் இருந்து கட்சியை வழிவகுத்து வருகிறார். சமூகப் பணியில் அவருக்கு இருந்த பேரார்வமே, தமிழ்நாட்டின் தலைச்சிறந்த முதலமைச்சராக அவரை செயல்பட வைத்தது. 60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து, ஒரு வலிமையான சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் திறம்பட வழிநடத்துகிறார். மு.கருணாநிதி அன்போடு மக்களால் “கலைஞர்” என்று அழைக்கப்படுகிறார்.

தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்து, அசைக்க முடியாத ஒரு சக்தியாக விளங்குகிறார். தமிழ் இலக்கியத்தில் அவருடைய இலக்கிய பங்களிப்பைத் தவிர சமூகத்திலுள்ள ஏழை எளியவர்களின் நலனுக்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்டார்.

தனது அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி, சமூக பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிக்காகவும்,   சீர்திருத்தத்திற்காகவும் போராடினார். அவருடைய ஆட்சியின் போது, கொண்டு வரப்பட்ட ‘தமிழ்நாடு இலவச காப்பீட்டுத் திட்டம்’, தமிழக ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரமாக இருந்தது. மாநில பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தொழில்துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.

பிறப்பு

திமுக தலைவர் கருணாநிதி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

அவருடைய பெற்றோர்கள் இருவரும் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவரது தாயார் ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்; வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில், ஒரு கோவிலில் நடன கலைஞராக இருந்தார். கருணாநிதி அவர்களின் இயற்பெயர் ‘தட்ஷிணாமூர்த்தி’, பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். அவரது குழந்தைப்பருவமும், ஆரம்பக்கல்வியும் திருப்திகரமாக இல்லாதபோதிலும், அவர் தமிழ் இலக்கியத்தின் மீது மிகவும் பற்றுடையவராக இருந்தார்.

கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கி டீமிற்காக விளையாடி இருக்கிறார் கருணாநிதி. இவர் எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் பேசினார்.

தொழில்

தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட அவர், தமிழ் திரையுலகில் கதை-வசனம் எழுதுபவராக .இருந்தார். அவருடைய திரை வசனங்கள் மூலம், அர்த்தமுள்ள சமூக செய்திகளை வெளிப்படுத்த முயன்றார். அவரது கதைகளனைத்தும், ‘விதவை மறுமணம்’, ‘ஜமீன்தார் முறையை ஒழித்தல்’, ‘மத பாசாங்குத்தனத்தை ஒழித்தல்’, ‘தீண்டாமை அழிப்பு’ மற்றும் ‘சுய மரியாதை திருமணம் ஒழிப்பு’ போன்றவற்றை சார்ந்தே இருக்கும். பாரம்பரிய இந்து மத சமூகங்கள் எதிர்த்த பிராமண ஆதிக்கத்தின் எதிர்மறை அம்சங்களை, தனது படமான ‘பராசக்தியில்’ பிரதிபலித்தார். பல சர்ச்சைகள் இருந்தாலும், இப்படம் பரவளான விளம்பரம் பெற்று, மாநிலத்திலுள்ள அனைத்து பார்வையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் திரைக்கதையிலுள்ள மரபுசாரா கருப்பொருள்களே, அவரை அக்காலத்தில் மிகவும் பிரபலமாக்கியது. திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதைத் தவிர, கருணாநிதி அவர்கள், பல்வேறு கவிதைகள், கடிதங்கள், புத்தகங்கள், வரலாறு, வரலாற்று நாவல்கள், இசை, வசனம், நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், போன்றவற்றையும் எழுதியிருக்கிறார். அவர் ஒரு கலாரசிகனாக இருந்ததால், புகழ்பெற்ற கவிஞரான திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கட்டடக்கலைக் குவியலான ‘வள்ளுவர் கோட்டத்தை’ நிறுவினார்.

அரசியல் வாழ்க்கை

கருணாநிதி முதன்முதலில் துவங்கிய பத்திரிகையின் பெயர் மாணவ நேசன். 1941 ஆம் ஆண்டில் வெளியான மாணவ நேசன் ஒரு மாத இதழ். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலவிய நீதி கட்சியின் உறுப்பினராக இருந்த அழகிரிசாமியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ஒருமுறை, சமூகநல காரணங்களைப் பற்றிய அழகிரிசாமியின் உரையை கேட்ட கருணாநிதி, அதனால் ஊக்குவிக்கப்பட்டார். அவர் இளைஞர்களுக்கான உள்ளூர் சமூக அமைப்பை முதலில் உருவாக்கிய பின், சமூகப்பணி ஆதரவைப் பெற்றுத் தொடங்கினார். அவர், மாணவர்களுக்கான மாணவர் அமைப்பை, ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற பெயரில் தொடங்கினார். இதுவே, அவர் சமூக காரணங்களில் ஈடுபட வழிவகுத்தது. இந்த காலக்கட்டத்தில், தனது வேலைகளை விளம்பரம் செய்ய பத்திரிக்கை என்னும் சக்தியை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். இதன் காரணமாக, தனது சொந்த தலையங்க பத்திரிக்கையை உருவாக்கினார். 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி, அவர் தனது பத்திரிக்கையான “முரசொலி”யை தொடங்கினார். அப்பொழுது முதல், இந்த பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இருந்து வருகிறார். எழுத்துத்திறன் கொண்ட கருணாநிதி,  தனது பத்திரிகைகள் மூலமாக தனது கட்சி உறுப்பினர்கள் பற்றியும், அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார்.

மேலும் ‘குடியரசு’, ‘முத்தாரம்’, ‘தமிழரசு’ போன்ற தனது இதர வெளியீடுகளிலும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறார். கள்ளக்குடியில், இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருணாநிதி ஒரு போராளியாக பங்கேற்றார். இதுவே, அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்து, அவரை ஒரு முக்கிய தலைவராக உருவெடுக்க செய்தது.

1957-ல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து, முதல் முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961-ல் திமுகவில் சேர்ந்தார், பின்னர் அதன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் எதிர்க்கட்சி தலைவரானார். 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்த போது, கருணாநிதி ஒரு சக்திவாய்ந்த செல்வாக்கு நிலைக்கு உயர்ந்தார்.

1967-ல்  தமிழ்நாடு முதலமைச்சராக பணியாற்றிய அண்ணாதுரை, திடீர் மரணம் அடைந்ததால், பதவிப் பொறுப்பை தொடர முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின், அண்ணாதுரை வகித்த முதலமைச்சராக பதவியை மு.கருணாநிதி ஏற்றார். அதன் பின், அவர் 1971, 1989, 1996 மற்றும் 2006-ல் மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மு.கருணாநிதி, திமுகவின் ஆணிவேராக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மாநில அரசியலிலும், ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்.

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் தான் அதிகபட்சமாக 3 முறை வெற்றி பெற்றுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் தலா 2 முறை தேர்வுசெய்யப்பட்ட கருணாநிதி, 1957 ஆம் ஆண்டுமுதல்  60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தார்.

தமிழக வரலாற்றில் நீண்ட கால முதலமைச்சராக பதவி வகித்தவரும், நீண்ட கால எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்தவரும் கருணாநிதியே. தமிழக வரலாற்றில் அதிகபட்ச இடங்களில் வெற்றிபெற்று ஒரு கட்சி ஆட்சி அமைத்தது கருணாநிதி  தலைமையில்தான்.

அதிகபட்ச இடங்களைப் பெற்று எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தவரும் இவரே. இவற்றையயெல்லாம் தாண்டி, தமிழக அரசியல் வரலாற்றில் நடைபெற்ற தேர்தலில், தோல்வியை சந்திக்காத தலைவராக மிளிருகிறார் கருணாநிதி. 2016-ம் தேர்தலில்தான் திருவாரூர் தொகுதியில் 68 ஆயிரத்து 366 வாக்குகள் பெற்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

ராஜாஜி காலத்தில் தொடங்கி, எடப்பாடி பழனிசாமி வரை 12 முதலமைச்சர்களின் ஆட்சிக்காலத்தில் கருணாநிதி அரசியல் பணியாற்றியுள்ளார். சட்டப்பேரவையில், திமுக சட்டமன்றக் கட்சி தலைவர், எதிர்க் கட்சி துணைத் தலைவர், பொதுப் பணித் துறை அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்த பெருமை கருணாநிதிக்கு மட்டுமே உண்டு.

சாதனைகள்

1970-ல் பாரிஸில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் ஒரு கெளரவ உயர் பதவியாளராக இருந்தார். 1987-ல், அவர் மலேஷியாவில் நடந்த  உலக தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.  2010 க்கான  ‘உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்’ அதிகாரபூர்வமான கருப்பொருள் பாடலை உருவாக்கும் பொறுப்பை ஏற்றார். இதன் பின்னணி இசையை ஏ. ஆர். ரகுமான் அமைத்தார். தமிழ் இலக்கியத்தில், தனது இலக்கிய பங்களிப்பைத் தவிர, தனது மக்கள் நலனிற்காக தனது ஆதரவை நீட்டித்தார்.

மாநிலத்தின் வளர்ச்சிக்காக, கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் பலவற்றையும் மேற்கொண்டார். ஐ.டி துறையை மாநிலத்தில் வரவேற்கும் விதமாக, அவருடைய பதவி காலத்தில்,  டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார். ஒரகடத்தில்,  புதிய டிராக்டர் உற்பத்தி செய்யும் செல்லைத் தொடங்கினார். மஹிந்திரா மற்றும் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகிறது.

தனிப்பட்ட வாழ்க்கை

கருணாநிதி  மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியான பத்மாவதி அவர்களுக்கு, எம்.கே. முத்து என்று ஒரு மகன் பிறந்தார். அவரது முதல் மனைவி, திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார். கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்களே அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்கு பிறந்தவர் தான் கனிமொழி.

விருதுகள்

  • அண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கெளரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது.
  • தமிழ் பல்கலைக்கழகம், அவரது படைப்பான “தென்பாண்டி சிங்கம்” என்ற புத்தகத்திற்கு ‘ராஜா ராஜன் விருதை’ வழங்கியது.
  • தமிழ்நாட்டு கவர்னரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தனர்.
  • தமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சி, அவருக்கு “முஸ்லீம் சமூக நண்பர்” என்ற பட்டதை வழங்கியது.

From around the web