கரும்பு விவசாயிகளுக்கு ரூ.150 கோடி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!!

 
MK-Stalin-launches-Rs-150-crore-incentive-scheme

சர்க்கரை ஆலைகளுக்கு 78 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு வழங்கிய 91,120 விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி, பெரம்பலூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களி ரூ. 97 கோடி மதிப்பீட்டில் மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சார்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கடந்த ஆண்டு சர்க்கரை ஆலைகளுக்கு 78 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு வழங்கிய 91 ஆயிரத்து 120 விவசாயிகளுக்கு கரும்பு ஊக்கத்தொகை மற்றும் சிறப்புத்தொகையாக ரூ. 150 கோடி வழங்கும் திட்டம், பருத்தி விவசாயிகளின் நலனுக்காக ரூ. 11 கோடி மதிப்பீட்டில் ‘நீடித்த நிலையான பருத்தி இயக்கம்’ என்ற திட்டம் ஆகியவற்றை முதல்வர் தொடங்கி வைத்தார்.

மேலும் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக இ-வாடகை ஆன்லைன் செயலி மற்றும் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம் ஆகியவற்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

From around the web