உயர்கல்வி சேர வரும் 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்

 
Ponmudi

உயர்கல்வியில் சேர்வதற்கு வரும் 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை 11 மணிக்கு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

மேலும் 22-ம் தேதி காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு எழுதலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கல்லூரிகளில் சேர வரும் 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் பொன்முடி, “பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்குவதற்கான ஏற்பாடு அனைத்து கல்லூரிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கவுரவ விரிவுரையாளர்களுக்கான தேர்வு நிறுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் பணியில் தொடரலாம்” என்று அவர் கூறினார்.

இதனிடையே ஜூலை 31-ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளதால் அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web