மெகா தடுப்பூசி முகாம் நிறைவு; ; ஒரே நாளில் 25.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி

 
Vaccine-camp

தமிழ்நாட்டில் காலை 7 மணி முதல் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் இரவு 7 மணிக்கு நிறைவு பெற்றது.

தமிழ்நாடு முழுவதும் 43,051 முகாம்கள் மூலம் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் தடுப்பூசி இலக்கான 20 லட்சம் தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் மெகா முகாம்கள் மூலம் சுமார் 26 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web