கம்யூனிசம்- லெனினிசம் முன்னிலையில்... சோசலிசத்தை திருமணம் செய்யும் மம்தா பானர்ஜி..!

 
Salem

தமிழ்நாட்டில் கம்யூனிசத்தின் முந்தைய நிலையான சோசலிசம் என பெயர் கொண்டவரை திருமணம் செய்கிறார் மம்தா பானர்ஜி என பெயர் வைத்தவர்.

திருமண அழைப்பிதழில் மணமகன் சோசலிசம் மணமகள் மம்தா பானர்ஜியை ஜூன் 13 அன்று திருமணம் செய்து கொள்ளபோகிறார்.  முன்னாள் சகோதரர்களான கம்யூனிசம் மற்றும் லெனினிசம் முன்னிலையில் குடும்பத்தின் பேரனான மார்க்சியமும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் என குறிப்பிட்டு உள்ளார்.

அவரது மகன் பெயர் ஏ.எம்.சோசலிசம் மணமகள் பெயர் மம்தா பேனர்ஜி. கம்யூனிஸ்ட் என்பதால் தனது மகன்களுக்கு கட்சியின் கொள்கைகளைப் பெயராக வைத்ததாக கூறுகிறார் மோகன், “சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு உலக நாடுகளில் இதன்பிறகு கம்யூனிசமே உருவாகாது என பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கம்யூனிசத்திற்கு என்றுமே அழிவில்லை என்பதை உணர்த்தவே என் முதல் மகனுக்கு ‘கம்யூனிசம்’ என பெயர் வைத்தேன். ரஷியத் தலைவர் லெனின் மீது கொண்ட பற்று காரணமாக 2-வது மகனுக்கு லெனினிசம் என்றும் மூன்றாவது மகனுக்கு ‘சோசலிசம்’ என பெயர் வைத்ததாக கூறுகிறார் தோழர் மோகன்.

கம்யூனிச கொள்கையைப் பின்பற்றுபவர்கள் இப்படி பெயர் வைப்பது என்பது புதியதல்ல. தமிழ்நாட்டில் மாஸ்கோ, ரஷியா என்றெல்லாம் கூட பெயர்கள் உண்டு. ஆனால் மோகனின் மகன் சோசலிசம் திருமணம் செய்ய உள்ள பெண்ணின் பெயர் மம்தா பேனர்ஜி என்பதுதான் ஆச்சரியம்.

இதற்கு காரணம் மணப்பெண்ணின் குடும்பம் பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பம். இளம் தலைவராக காங்கிரசில் வலம் வந்த மேற்கு வங்கத்தின் சிங்க பெண் என்றிழைக்கப்படும் மம்தா பேனர்ஜியின் பெயரை தங்கள் மகளுக்கு சூட்டி மகிழ்ந்துள்ளார் பழனிசாமி நீலாம்பாள் தம்பதியினர்.

மேற்கு வங்கத்தில் கம்யூனிசத்தைக் கடுமையாக விமர்சித்து, கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக களமாடுகிறார் அந்த மம்தா பானர்ஜி. ஆனால் சேலத்திலோ தீவிர கம்யூனிஸ்ட் குடும்பமான மோகனின் குடும்பத்தில் ஐக்கியமாக உள்ளார் இந்த மம்தா பானர்ஜி.

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும் முரண்படுகிறது.  ஆனால் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில், அவர்கள் இருவரும் ஒரே பக்கத்தில் உள்ளனர்.

சோசலிசம் – மம்தா பானர்ஜியின் திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

From around the web