தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் ரூ.358 கோடிக்கு மது விற்பனை..!!

 
TASMAC

தமிழ்நாட்டில் 2 தினங்களில் மட்டும் ரூ. 358 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை அன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என அரசு அறிவித்திருந்தது. அதன் காரணமாக ஏராளமானோர் கடந்த சில நாட்களாக மதுக்கடைகளில் திரண்டு மதுபானங்களை வாங்கியுள்ளனர்.

இதனையடுத்து கடந்த 2 நாட்களில் மட்டும் அதாவது நேற்று மட்டும் ரூ. 203 கோடி, நேற்று முன்தினம் ரூ. 153 கோடி என மொத்தம் 358 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.

From around the web