தமிழ்நாட்டில் ஒரே நாளில் ரூ.148 கோடிக்கு மது விற்பனை..! கடந்த ஆண்டை விட கம்மி தான்..! காரணம் என்ன தெரியுமா?

 
TASMAC

புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டில் ரூ.148 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டை விட மது விற்பனை குறைந்துள்ளது.

பொதுவாக பண்டிகை நாட்கள் வந்தால் தமிழ்நாட்டில் மது விற்பனை அதிகரிக்கும். அதிலும் சென்னை, புதுச்சேரி  உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக மது விற்கப்படும். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு நாட்களில் அதிகமாக மது விற்பது வழக்கம்.

டாஸ்மாக்கில் சராசரியாக, வார நாட்களில் ரூ. 70 முதல் 75 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனையாகிறது. வார இறுதி நாட்களில் வசூல் ரூ. 90 கோடி வரை விற்பனை அதிகரிக்கும்.

தீபாவளி மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில், ஒரு நாள் வருமானம் மட்டும் பொதுவாக ரூ.100 கோடியைக் கடக்கும். அந்த வகையில் நேற்று காலையில் இருந்து தமிழ்நாட்டில் மது விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று உள்ளது.

ஒவ்வொரு புத்தாண்டின் போதும் மது விற்பனை, முந்தைய ஆண்டின் சாதனையை முறியடிக்கும். ஆனால் கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக புத்தாண்டு மது விற்பனை குறைந்து, இந்த தொடர் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்த நிலையில், 2022 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று (டிசம்பர் 31) ஒரே நாளில் தமிழ்நாட்டில் ரூ. 148 கோடிக்கு மதுவகைகள் விற்பனையாகி உள்ளது.

கடந்த ஆண்டு புத்தாண்டின் போது (2021) ரூ.159 கோடிக்கு மதுவகைகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மது விற்பனை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web