தனியாகவே பாஜக வெற்றி பெறும்!பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி!
தமிழகத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் பாஜகவும் அதன் தேர்தல் வியூகங்களை வகுக்க ஆலோசனை மற்றும் செயற்குழு கூட்டங்களை நடத்தி வருகிறது.
அந்த வகையில் பா.ஜ.க இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்
அதன் படி, சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக தயாராகி வரும் நிலையில் தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வலிமையுடன் உள்ளதாகவும், மற்ற கூட்டணி குறிப்பிட்ட நேரத்தில் மேலிடம் முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.