அறிவிச்சா போதுமா? நிதி எங்கே இருக்கு? ப.சிதம்பரத்தின் கிடுக்கிப்பிடி கேள்வி!

 
அறிவிச்சா போதுமா? நிதி எங்கே இருக்கு? ப.சிதம்பரத்தின் கிடுக்கிப்பிடி கேள்வி!

4 ஆண்டுகள் 9 அமைதியாக ஒன்றும் செய்யாமல் இருந்த அதிமுக அரசு தேர்தல் நெருங்கும் நேரத்தில்  ஆட்சிக்காலம் முடியும் காலத்தில் முதல்வர் பழனிசாமி நலத்திட்டங்களை வரிசையாக அறிவிக்கிறார்,கடன்களை தள்ளுபடி செய்கிறார், சலுகைகளை அறிவிக்கிறார். இவைகளை நிறைவேற்ற நிதி எங்கிருந்து வரும் என்பதை முதல்வர் விளக்கவேண்டும்.சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்போவதாக கேள்விப்படுகிறோம். அதிமுக அரசு இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்யவேண்டும்.  மத்திய அரசும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு உருப்படியாக எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை  தேர்தல் நடக்கவுள்ள தமிழ்நாடு கேரளா மாநிலங்களுக்கு மத்திய அரசு  நிறைய நிதி ஒதுக்கீடு அறிவித்துள்ளது.  கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு போய்க்கொண்டு இருக்கிறது.  அதை சமாளிக்க மத்திய அரசுக்கு திறமையும் இல்லை அறிவும் இல்லை என விளாசியுள்ளார் மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம். 

குற்றச்சாட்டை மத்திய மாநில அரசுகள் பொறுமையாக காதுகொடுத்து கேட்க வேண்டும். இத்தனை  நல திட்டப்பணிகளுக்கும்  நிதிதிரட்ட வழிகளும் கருவிகளும் முன்னதாக திட்டமிடல் வேண்டும்.புதிய வரிகள் விதிப்பார்களா? டாஸ்மாக் கிளைகளை அதிகரிப்பரா? உலகவங்கியிடம் கடன் கேட்பார்களா? பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு ஏலம் விடுவார்களா ? சிதம்பரம் கேள்வி நியாயமானதே! 

இத்தனை நலத்திட்டங்களை நிறைவேற்றத்தான் டாஸ்மாக் கடைகளை விரிவாக்குகிறோம் என அடுத்துவரும் அரசும் காரணம் காட்டுவார்கள். லாபகரமாக இயங்கிவரும் ரயில்வே போன்ற  பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு டெண்டர் விடாமல் தக்கவைத்துக்கொண்டு  நேர்த்தியாக நிர்வகிப்பது எப்படி என முன்னாள் மத்திய  நிதி அமைச்சரிடம்  நிர்மலா சீத்தாராமன் ஆலோசனை பெறுவதில் தவறு இல்லை.

உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம், அஸ்ஸாம், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இயங்கும் ரயில்களை பரீட்சார்த்தமாக தனியாருக்கு தாரைவார்க்கட்டுமே ரயில்வேத்துறை பார்ப்போம். நிதிமேலாண்மையில்  பாஜக அரசு தடுமாறுவது உண்மை தான்

-வி.எச்.கே. ஹரிஹரன்

A1TamilNews