அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

 
Govt Govt

தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

தமிழ்நாடு அரசானது, அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனசை அறிவித்துள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியையும் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ்சும் வழங்கப்படுகிறது. சி, டி பிரிவு பணியாளர்களுக்கு ரூ. 3,000 , ஓய்வூதியதாரர்களுக்கு ரூ. 500 போனஸ், சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கு ரூ. 1,000 போனஸ் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் போனஸ் வழங்குவதன் மூலம் அரசுக்கு  ரூ.169.56 கோடி இழப்பு ஏற்படும் என அரசு அறிவித்துள்ளது. அகவிலைப்படி உயர்வு மற்றும் பொங்கல் போனஸ் இரண்டிற்கும் ரூ.8,894 கோடிய தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

From around the web