ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 
CMStalin-incentive-for-temple-barbers

மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

‘மொட்டைக்கு இல்லை கட்டணம்’ என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, திருக்கோயில்களில் மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வரும் 1,749 தொழிலாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

இந்நிலையில், மொட்டை போடும் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் தொடங்கி இன்று வைத்தார்.

CMStalin

அத்துடன் அரிசி, பருப்பு, தேயிலைத்தூள், உள்ளிட்ட 16 வகையான மளிகை பொருட்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த திட்டம் 349 கோவில்களில் இருந்து 1,744 பணியாளர்களுக்கு மாத ஊக்கதொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

From around the web