புதையல் எடுக்க வீட்டிற்குள் 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டிய ஐஸ் வியாபாரி..! நரபலி கொடுக்கப்பட்டதா..?

 
Perambalur

பெரம்பலூர் அருகே புதையல் இருப்பதாக கூறி மாந்த்ரீக பூஜை செய்து, வீட்டிற்குள் 20 அடி ஆழத்திற்கு குழிதோண்டிய 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. ஐஸ் வியாபாரம் செய்து வரும் இவரது வீட்டிற்குள் புதையல் இருப்பதாக ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார்.

இதை நம்பி பரமத்திவேலூரைச் சேர்ந்த பூசாரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் என 7 பேர் சேர்ந்து மாந்த்ரீக பூஜை செய்துள்ளனர்.

பின்னர் பிரபுவின் வீட்டிற்குள்ளேயே மூன்று நாட்களாக இரவு பகலாக 20 அடி ஆழத்திற்கு மேல் குழி தோண்டியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அருகாமையில் உள்ளவர்கள், புதையலுக்காக நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்துடன் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அந்த வீட்டிற்கு சென்ற போலீசார், 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

From around the web