கெட்ட நாற்றம் வராமல் தடுக்க ஜன்னலை மூடுகிறேன்.. என் நேரத்தை வீணாக்க வேண்டாம்! வானதி சீனிவாசனுக்கு பிடிஆர் பதில்!

 
PTR Vanathi

கெட்ட நாற்றம் வரமால் இருப்பதற்காக ஜன்னலை மூடுகிறேன், தயவு செய்து என் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று கூறி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனை ப்ளாக் செய்துள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

ஜி.எஸ்.டி. கவுன்சிலில் அளவுக்கு அதிகமான நேரம் எடுத்துப் பேசியதாக கோவா போக்குவரத்துத் துறை அமைச்சர் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். மதுரை மாவட்டத்தில் பாதி மக்கள் தொகை கூட இல்லாத மாநிலத்திற்கு இவ்வளவு நேரம் கொடுத்தது சரியல்ல. 20 கோடி மக்கள் தொகைக்கும் அதிகமாக உள்ள உ.பி. பிரதிநிதி சில நிமிடங்களே பேசியதும் உடன்பாடானது இல்லை என்று நிதியமைச்சர் கூறியிருந்தார். ஜி.எஸ்.டி கவுன்சிலில் கோவா மக்களை அவமானப்படுத்திவிட்டார் என்று அம்மாநிலப் பிரதிநிதியான போக்குவரத்துத் துறை அமைச்சர் கருத்து வெளியிட்டு இருந்தார். 

இந்த விவகாரம் குறித்து வானதி சீனிவாசன் ட்விட்டரில் பி.டி ஆரை டேக் செய்து” ஜி.எஸ்.டி கவுன்சிலில் தியாகராஜன் நடந்து கொண்ட விதம் நம்முடைய ஜனநாயகத்தை அவமதிப்பதாகவும் நம்முடைய மாநிலத்தின் நன்மதிப்பை சேதப்படுத்துவதாகவும் உள்ளது. கோவாவின் போக்குவரத்து அமைச்சரை வார்த்தைகளால் அர்ச்சிப்பது செய்வது தமிழ்நாட்டு நலன்களுக்கு எந்த பயனும் அளிக்காது,” என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த பிடிஆர், “உங்கள் பொய்களுடன் என்னை டேக் செய்வதைத் தவிர்த்து மாற்றத்திற்கான உண்மையான சில வேலைகளைப் பாருங்கள். நீங்கள் பிறவியிலேயே குறைபாடு உள்ள பொய்யரா? உங்களின் குறைந்த அறிவுத் திறனால், ”யாரும் யாரையும் ஜி.எஸ்.டி. கவுன்சிலில் அவமானப்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறீர்களா?”.. பொறுங்கள், பதிலளிக்க வேண்டாம். அது ஒரு சிக்கலான கேள்வி . அந்த இரண்டும் உங்களுக்கு உண்டு,” என்று காட்டமாகக் கூறியிருந்தார்.

பிடிஆரின் பதிலுக்குப் பதிலளித்த வானதி சீனிவாசன்,” நம் மாநிலத்தின் நிதியமைச்சர் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாதவராக இருப்பது துரதிர்ஷ்டம், சின்னத்தனமாக அவருடைய எதிர்வினை இருக்கிறது.  என்னை பொய்யர் என்றோ அறிவுத்திறன் அற்றவர் என்றோ சொல்லலாம். ஆனால் உண்மை மாறாது. ஹெச்.ராஜா. ஜக்கி வாசுதேவ் பற்றி நீங்கள் சொன்ன கருத்துக்கள் உங்களுடைய ஆபாசத்தன்மையை காட்டுகிறது,” என்று கூறியிருந்தார்.

வானதியின் பதிலுக்கு, “ அதிகமான பிணங்கள் விழவில்லை என்பதால் அரசியல் செய்யமுடியாமல் கவலையுடன் இருப்பதாக” திமுக செய்தித் தொடர்பாளர் மீது முன்பு ஒரு தடவை குற்றம் சாட்டியிருந்தீர்கள்.  கெட்ட நாற்றம் வராலம் இருக்க ஜன்னலை மூடும் ஒரு சாதாரண மனிதன் போல் உங்களை நான் ப்ளாக் செய்கிறேன். உங்களிடமிருந்து நல்லபண்புடையவன் என்ற நற்சான்றிதழ் வாங்குவது அவமானகரமானது. தயவு செய்து என்னுடைய நேரத்தை வீணாக்காதீர்கள்,” என்று பிடிஆர் கூறியுள்ளார்.


ஒரு முக்கிய அரசியல்வாதியை, அமைச்சர் ஒருவர் ட்விட்டரில் ப்ளாக் செய்வது இதுவே முதன்முறை என்று தெரிகிறது.

From around the web