இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் - ஆளுநர் பாராட்டு

 
RNRavi

‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் தமிழ்நாடு சட்டசபை கூடும்போது கவர்னர் வந்து உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. வணக்கம் என தமிழில் சொல்லி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர் கூறியதாவது, “கொரோனா 2-வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகள். முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. ஒமைக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில் தான்.

இரு மொழி கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.

இலங்கை தமிழர் நலனுக்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு பின்னர் முல்லை பெரியாறு அணையில் 142 அடிக்கு நீர் தேக்கப் பட்டுள்ளது. விரைவில் 152 அடி நீர் தேக்கப்படும். மேகாதாது அணை கட்டும் திட்டம் தடுத்து நிறுத்தப்படும்.” என்று கூறினார்.

From around the web