முழு ஊரடங்கு நாளில் திருமண நிகழ்ச்சி செல்பவர்களுக்கு அனுமதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 
Lockdown

முழு ஊரடங்கான நாளை திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் முதல் இரவு ஊரடங்கு அமலபடுத்தப்பட்டுள்ளது.

நாளை தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும் அத்தியாவசிய பணிகளான மருத்துவ பணிகள், மருந்தகங்கள், பால் வினியோகம், ஏ.டி.எம். மையங்கள், சரக்கு வாகனப்போக்குவரத்து மற்றும் பெட்ரோல் - டீசல் பங்குகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படும் என்றும் பொதுப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவை இயங்காது என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் முழு ஊரடங்கான நாளை திருமண விழாவிற்கு செல்ல அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திருமண அழைப்பிதழை காண்பித்து பயணங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமண அழைப்பு பத்திரிக்கை உள்ளிட்டவற்றை காண்பித்தால் அனுமதிக்கப்படுவர் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

From around the web