ஜனவரி 17-ம் தேதி அரசு விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 
Secretariat

தமிழ்நாட்டில் வரும் 17-ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி 18-ம் தேதி தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை என்பதால், 17-ம் தேதியும் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 17-ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 29-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பால், வெள்ளிக்கிழமை (ஜன.14) முதல் செவ்வாய்க்கிழமை வரை  தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு  அரசின் இந்த அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், அன்றைய தினம் சொந்த ஊர்களில் இருந்து திரும்ப முடியாத நிலை இருந்தது. தற்போது திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பொங்கள் கொண்டாட சென்றவர்கள் சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ள முடியும்.

From around the web