தங்கம் விலை சற்று குறைந்தது.. இன்றைய காலை நிலவரம் என்ன?
Nov 19, 2021, 10:01 IST
தங்கம் மற்றும் வெள்ளி இன்றைய காலை நிலவரம்.
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 48 ரூபாய் குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,032-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து, ரூ.4,629-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 71,100 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து ரூ.70,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.