வேதா இல்லம் தொடர்பான நீதிமன்ற உத்தரவில் மேல் நடவடிக்கை? ஜெயக்குமார் பேட்டி

 
Jayakumar

ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வேதா இல்லம் அதிமுகவினருக்கு கோவிலாக இருந்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடை ஆக்கியது செல்லாது என உத்தரவிட்டுள்ளது. வேதா நிலையத்தை 3 வாரங்களில்  வாரிசுகளான தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

“ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வேதா இல்லம் அதிமுகவினருக்கு கோவிலாக இருந்து வருகிறது. கட்சியில் சில கருத்துப்பரிமாற்றம் இருக்கும் அதை பெரிதுபடுத்தி பேச வேண்டாம். வேதா இல்ல விவகாரத்தில் மேல் நடவடிக்கை பற்றி தலைமை முடிவெடுக்கும். உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் கட்சி மாற மாட்டார்கள். வியபாரிகள் தான் எந்த குளத்தில் தண்ணீர் இருக்கிறது என்பதை பார்த்து கட்சி மாறுவார்கள்” என்றார்.

From around the web