இனி இலவசமாக மாற்று வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

 
Voter

அடுத்த மாதத்தில் இருந்து மாற்று வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டை ஓட்டு போடுவதற்கு மட்டுமன்றி வேறு பல நிர்வாக பணிகளுக்கும் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து போனால் மீண்டும் அதை பெற காலதாமதம் ஆவது மக்களுக்கு சிரமத்தை அளித்து வந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில், அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுரையை செயல்படுத்திடும் விதமாக இந்த அலுவலகம், அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளையும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 342 அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

From around the web