அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் தந்ததாக பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது

 
Rajendra-balaji-arrested

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரா பாலாஜிக்கு அடைக்கலம் தந்ததாக பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி மூலம் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3.10 கோடி பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் கடந்த 17-ந் தேதி முதல் தலைமறைவானார். 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியை  தனிப்படை போலீசார் கர்நாடகவில் இன்று கைது செய்தனர். கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கைதான ராஜேந்திர பாலாஜி தமிழ்நாடு அழைத்து வரப்பட்டார்.  விருதுநகர் போலீசாரிடம் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இதற்கிடையே, ராஜேந்திரா பாலாஜிக்கு அடைக்கலம் தந்ததாக பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

From around the web