பசும்பொன் மக்கள் ‌கழக நிறுவனர் ச.இசக்கிமுத்து காலமானார்

 
பசும்பொன் மக்கள் ‌கழக நிறுவனர் ச.இசக்கிமுத்து காலமானார்

பசும்பொன் மக்கள் ‌கழக நிறுவனர் ச.இசக்கிமுத்து இன்று காலை காலமானார்.

முன்னதாக, பசும்பொன் மக்கள் கழகத்தின் நிறுவனர் ச.இசக்கிமுத்து தேவர் சமுதாயத்தினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியையும், துணை முதல்வரையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.

தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தோர் சமுதாயம், ஏழை எளிய பின்தங்கிய சமூதாயம் என்றும், கல்வி, வேலைவாய்ப்பில் முக்குலத்தோர் சமூதாயத்திற்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்.

இந்நிலையில், பசும்பொன் மக்கள் கழக நிறுவனர் ச.இசக்கிமுத்து உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். சட்டமன்ற தேர்தலில் முடிந்த பின் மரணமடையும் இரண்டாவது வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web